Home இலங்கை இலங்கை வியட்நாமிற்கு இடையில் கல்வி ஒத்துழைப்பு

இலங்கை வியட்நாமிற்கு இடையில் கல்வி ஒத்துழைப்பு

by Jey

இலங்கை  மற்றும் வியட்நாம் சோசலிச குடியரசுக்கும் இடையிலான கல்வி ஒத்துழைப்புக்கள் தொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதனடிப்படையில், இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான உயர்கல்வித் துறையில் இருதரப்பு ஒத்துழைப்புக்களை மேலும் விருத்தி செய்ய வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்காக 2017-2020 வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தைத் திருத்தங்களுடன் கூடியதாக 2024-2026 வரையான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்கு இருதரப்பினரும் உடன்பாடு தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, உயர்கல்வித் துறையில் அபிவிருத்தி மற்றும் புத்தாக்கம் தொடர்பான தகவல்கள் மற்றும் அனுபவங்களைப் பரிமாற்றிக் கொள்ளல், ஒருங்கிணைந்த ஆய்வுகளை நடாத்துதல், இருதரப்பினரின் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கிடையே ஒத்துழைப்பு நிகழ்ச்சித் திட்டங்களை ஊக்குவித்தல் போன்ற செயற்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும், இருதரப்பினராலும் உடன்பாடு எட்டப்படுகின்ற துறைகளில் முதலாவது பட்டப்படிப்பு அல்லது பட்டப்பின் படிப்புக்களுக்கான புலமைப்பரிசில் பரிமாற்றம் மற்றும் இருநாட்டு பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களுக்கிடையே மாணவர்கள், கல்வியியலாளர்கள் பரிமாற்றம் போன்ற நோக்கங்களுக்காக 2024-2026 காலப்பகுதி வரை செல்லுபடியாகும் வகையில் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

related posts