உலகளாவிய ரீதியில் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், விமான சேவைகள், விமான நிலையங்கள் வங்கிகள், தொலைதொடர்பாடல் நிறுவனங்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பாரியளவிலான தகவல் தொழில்நுட்ப ஸ்தம்பித நிலை குறித்து உலக நாடுகள் தகவல் வெளியிட்டு வருகின்றன.
அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளில் விமானப் போக்கவரத்துக்கு பாதிப்பு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப கோளாறு எனக் குறிப்பிடப்பட்ட போதிலும் சரியான விபரங்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை.
கணனி வைரஸ்களிலிருந்து பாதுகாப்பதற்காக வழங்கப்படும் பாதுகாப்பு மென்பொருட்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தகவல் தொழில்நுட்ப பிரச்சினையினால் அமெரிக்கா, நியூசிலாந்து, இந்தியா, ஜப்பான், உள்ளிட்ட பல நாடுகளின் விமானப் பயணங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.