Home கனடா கனடாவில் வாகன கொள்ளை சம்பவங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

கனடாவில் வாகன கொள்ளை சம்பவங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

by Jey

கனடாவில் வாகன கொள்ளை சம்பவங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அந்நாட்டு காப்புறுதி மோசடி தவிர்ப்பு பிரிவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இதன்படி, இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் வாகன கொள்ளை சம்பவங்களின் எண்ணிக்கை 17 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் இவ்வாறு வாகன கொள்ளை சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

எல்லை பாதுகாப்பு கண்காணிப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டமை, பொலிஸாரின் விசாரணைகள், அரசாங்கத்தின் நடவடிக்கை மற்றும் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு போன்ற காரணிகளினாலே வாகன கொள்ளை சம்பவங்கள் குறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், கூட்டு முயற்சியின் மூலம் வாகன கொள்ளை சம்பவங்கள் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் ஒன்றாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் பொலிஸார் வாகன கொள்ளை தடுப்பு தொடர்பிலான விசேட பொலிஸ் படையணிகளை நிறுவி நடவடிக்கை எடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

விமான நிலையங்களில் தொழில்நுட்ப சிக்கல்கள் பதி

அவுஸ்திரேலியாவின் விமான சேவைகள் மற்றும் விமான நிலையங்களில் தொழில்நுட்ப சிக்கல்கள் பதிவாகியுள்ளதுடன், பல விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

தொழில்நுட்ப கோளாறுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையை மீட்டெடுப்பதில் சில சிரமங்கள் இருப்பதாக மைக்ரோசாப்ட் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலை முக்கியமாக பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து பதிவாகியுள்ளதுடன், இதன் காரணமாக லண்டன் பங்குச் சந்தையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

 

 

 

 

 

 

புதிய முறைமையின் மூலம் வழங்கப்படும் கடவுச்சீட்டு

கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களின் வசதிக்காக இன்று வெள்ளிக்கிழமை முதல் புதிய முறைமையின் மூலம் கடவுச்சீட்டு விண்ணப்பம் வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் கடந்த 17 ஆம் திகதி அறிவித்திருந்தது.

அதன் பிரகாரம் விண்ணப்பதாரர் கடவுச்சீட்டைப் பெற அல்லது புதுப்பிக்க www.immigration.gov.lk இணையத்தளத்தின் மூலம் திகதி மற்றும் நேரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இது ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவை ஆகிய இரண்டிற்கும் பொருந்தும்.

இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு – குடியகல்வு திணைக்கள அலுவலகத்திற்கு கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் வந்திருந்தனர்.

திகதி மற்றும் நேரத்தை பெற்றுக்கொண்டவர்களுக்கு மட்டுமே இன்று வாய்ப்பு வழங்கப்படும் என குடிவரவு – குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால்
ஏற்பட்ட குழப்ப நிலையை போக்க பொலிஸாரும் கலகத் தடுப்புப் பிரிவினரும் அழைக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

related posts