பிரித்தானியாவின் லீட்ஸில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து இரட்டை அடுக்குமாடி பேருந்து ஒன்று கலகக்காரர்களால் தீவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பலத்த பொலிஸ் பிரசன்னம் இருந்தபோதிலும்,மக்கள் பொலிஸ் கார் மீது பல்வேறு பொருட்களை வீசி தாக்கியதாக கூறப்படுகின்றது.
லீட்ஸ் நகர மையத்திலிருந்து வடகிழக்கே சுமார் 1.6 கிமீ (1 மைல்) தொலைவில் உள்ள ஹரேஹில்ஸில் வன்முறை ஏற்பட்டது.
வியாழன் மாலை 5 மணியளவில் (உள்ளூர் நேரம்) ஹரேஹில்ஸில் உள்ள ஒரு குடும்பத்திலிருந்து நான்கு குழந்தைகளை அப்பகுதியில் சமூக சேவைகள் அழைத்துச் சென்றதன் காரணமாக வன்முறை வெடித்ததாக கூறப்படுகின்றது.
முன்னதாக கலவரம் நடந்த பகுதியில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டனர்.
தீ வைக்கப்பட்டதால் வாகனங்கள் சேதம் உட்பட அனைத்து குற்றவியல் குற்றங்கள் குறித்தும் முழு விசாரணை நடத்தப்படும் என்று யார்க்ஷயர் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் மீது சட்டத்தின் படி முழு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நாங்கள் தெளிவாகக் கூற விரும்புகிறோம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த வன்முறையில் யாருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை என்றும், சிலர் “சமூக பதட்டங்களைத் தூண்டுவதற்கு” முயற்சிப்பதாகவும் மேற்கு யார்க்ஷயரின் மேயர் தெரிவித்துள்ளார்.