Home Uncategorized சிலியில் பாரிய நிலநடுக்கம்

சிலியில் பாரிய நிலநடுக்கம்

by Jey

தென் அமெரிக்க நாடான சிலியில் பாரிய நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

சிலியில் உள்ள அன்டோஃபாகஸ்டாவில் 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் 128 கிமீ (79.54 மைல்) ஆழத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

AFP செய்தியின்படி, இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

சிலி பசிபிக் பகுதியில் “Ring of Fire” என்று அழைக்கப்படும் இடத்தில் அமைந்துள்ளதன் காரணமாக அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது.

இதன்படி, கடந்த ஜனவரியில், 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் 118 கிமீ ஆழத்தில் வடக்கு சிலியின் தாராபாகாவில் பதிவாகியிருந்தது.

எவ்வாறாயினும், 2010 இல், 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் 526 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

related posts