இந்தியாவின் கேரள மாநிலத்தில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட சிறுவனொருவன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்கோடு பஞ்சாயத்தை சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவனது உமிழ்நீர் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில் நிபா காய்ச்சல் அறிகுறி காணப்பட்டுள்ளது.
புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையிலும் வைரஸ் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சிறுவன் தனிமைபடுத்தப்பட்டுள்ளார்.
வைத்தியர்களால் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் சிகிச்சைப் பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளான் இந்நிலையில் குறித்த சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2018ஆம் ஆண்டு கேரளாவில் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் தாக்கம் காணப்பட்டது. தற்போது 06 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தலைதூக்கியுள்ளது.