வெனிசுவேலாவின் ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை எதிர்கட்சிகள் ஏற்க மறுத்துள்ளதை தொடர்ந்து அந்த நாட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.
வன்முறை காரணமாக வெனிசுலாவில் பதற்றம் நிலவி வருகிறது.
இதற்கிடையே அதிபர் நிகோலஸ் மதுரோவின் வெற்றியை அமெரிக்கா, சில தென் அமெரிக்க நாடுகள் ஏற்கவில்லை. அதே வேளையில் மதுரோவுக்கு ரஷியா, சீனா, கியூபா உள்ளிட்ட நாடுகள் வாழ்த்து தெரிவித்துள்ளன.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் நிகோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அவர் 51.2 சதவீத வாக்குகளும், எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர் எட்மண்டோ கான்சலஸ் 44.2 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனால் மதுரோ வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து அவரது ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் நிகோலஸ் மதுரோவின் வெற்றியை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை.