ரொறன்ரோவில் குரோத உணர்வின் அடிப்படையில் ரயில் பயணிகள்மீது இரண்டு சிறுமியர் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ரொறன்ரோவின் சென்ட் கிளையர் ரயில் நிலைய பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
ரயிலில் பயணித்த சிலர் குரோத உணர்வின் அடிப்படையில் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு தாக்குதலுக்கு இலக்கானவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.