Home உலகம் அல்-கபீரா பகுதியில் வீடொன்றில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 10 பேர் பலி

அல்-கபீரா பகுதியில் வீடொன்றில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 10 பேர் பலி

by Jey

கிழக்கு கான் யூனிஸின் அபாசன் அல்-கபீரா பகுதியில் உள்ள வீடொன்றில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா மற்றும் சில மேற்கத்திய நாடுகள் காசாவில் குற்றங்களைத் தொடர்வதற்கு இஸ்ரேலை,அலட்சியம் மற்றும் ஆதரவின் மூலம் ஊக்குவித்ததாக ஈரானின் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் கூறியதாக ஈரானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே பல சுற்று கலந்துரையாடல்கள் மற்றும் புதிய திட்டங்களை முன்வைப்பதற்கு பதிலாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முன்வைத்த போர்நிறுத்த முன்மொழிவை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டத்தை சமர்ப்பிக்குமாறு அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு ஹமாஸ் அழைப்பு விடுத்தது.

இஸ்ரேல்- ஹமாஸ் மோதலால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40,000 ஐ அண்மித்ததுடன் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 80,000 ஆயிரத்தைக் கடந்தது.

related posts