Home கனடா ஒன்றரியோ மாகாணத்தில் விமான விபத்து

ஒன்றரியோ மாகாணத்தில் விமான விபத்து

by Jey

ஒன்றரியோ மாகாணத்தின் ஒரோ மெடோனேட் நகரில் விமான விபத்து ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த விமான விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஓரோ மெடொனட் விமான நிலையத்தில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணையை நடத்துவதற்காக ஒன்றாரியோ போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

ஒரு எஞ்சினை கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

பயிற்சி நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களுக்கு எவ்வித காயங்களோ அல்லது உயிர் சேதங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த விமான விபத்துக்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடிய போக்குவரத்து பாதுகாப்பு சபை இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

விமானத்தில் புகைமூட்டம் ஏற்பட்டதாகவும், விமான ஓடு பாதையில் தரையிறக்கப்பட முன்தனாகவே வீழ்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

related posts