நாசா விண்வெளி ஆய்வு மையம் செவ்வாய் கிரகம் தொடர்பில் தொடர்ந்தும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி நாசாவின் இன்சைட் லேண்டரால் நடத்தப்பட்ட ஆய்வில் செவ்வாய் கிரகத்தில் திரவ நிலையில் நீர்த்தேக்கம் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நீர்த்தேக்கம் கடலில் முழு கிரகத்தையும் உள்ளடக்கும் அளவில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
7.2 முதல் 12.4 கிலோமீட்டர் வரையில் பாறைகளுக்கு இடையில் இத் திரவ நீர் தேங்கி நிற்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.