Home உலகம் உலக சுகாதார மையத்தால் தற்போது அவசர நிலை பிரகடனம்

உலக சுகாதார மையத்தால் தற்போது அவசர நிலை பிரகடனம்

by Jey

ஆபிரிக்காவில் குரங்கம்மையால் (Monkey pox) இதுவரை 500 க்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக அறிக்கைகள் வெளிவந்துள்ளன.

இதனால் குரங்கம்மை ஏனைய ஆபிரிக்க நாடுகளுக்கும் பரவக்கூடும் என்ற அஞ்சம் எழுந்துள்ளதால் ஆப்பிரிக்க சுகாதார அதிகாரிகள் அதிக தடுப்பூசிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் உலக சுகாதார மையத்தால் தற்போது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் வைரஸின் புதிய பதிப்பு தென்பட்டுள்ளதையடுத்து ருவாண்டா, புருண்டி மற்றும் மத்திய ஆப்பிரிக்க குடியரசு உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு வேகமாக பரவியுள்ளதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து உலக சுகாதார அமைப்பு நேற்றுப் புதன்கிழமையன்று mpox பரவுவதை உலகளாவிய பொது சுகாதார அவசரநிலை என்று அறிவித்தது.

குரங்கம்மை வைரஸ் ஆனது நெருங்கிய தொடர்புகள் மூலம் பரவக்கூடும். இதன் அறிகுறிகள் காய்ச்சல் மற்றும் தோலில் அதிக புண்களை ஏற்படுத்தும்.

நடப்பு ஆண்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என 13 நாடுகளில் குரங்கம்மை கண்டறியப்பட்டு உள்ளது. இவற்றில் காங்கோ நாட்டில் 96 சதவீதம் அளவுக்கு பாதிப்புகளும் மரணங்களும் ஏற்பட்டுள்ளன.

கொங்கோவில் 524 பேர் பலியாகி உள்ளனர். 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன என்றும் தெரிவித்து இருந்தது.

நாம் அனைவரும் கவலைப்பட வேண்டிய விசயம். இந்த வைரசானது ஆப்பிரிக்காவை கடந்து பரவ கூடிய ஆற்றல் படைத்துள்ளது என்பது அதிக வருத்தத்திற்குரியது என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் தெரிவித்தார்.

தற்போது குரங்கு அம்மை என்று அழைக்கப்பட்ட இந்த வைரஸ் முதன்முதலில் 1970 ஆம் ஆண்டில் இப்போது டிஆர்சி எனப்படும் மனிதர்களில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

கடந்த மே 2022 இல், உலகளவில் இந்த குரங்கு அம்மை நோய்த்தொற்றுகள் அதிகரித்தன. பெரும்பாலும் ஓரினச்சேர்க்கை மற்றும் இருபாலின ஆண்களை இவை அதிகமாக பாதிப்பதாகவும் ஆய்வுகனிக் மூலம் சுட்டிக்காட்டப்பட்டது.

அதிகமான குரங்கம்மை நோய் பரவல் காரணமாக தற்போது உலக பொது சுகாதார மையம் அவசரநிலையை அறிவித்தது.

இது ஜூலை 2022 முதல் மே 2023 வரை நீடித்தது. தற்போது மீண்டும் பெருமளவில் அதிகரித்துள்ளமையால் மீண்டும் அவசரநிலை பிரகடப்படுத்தப்படுகின்றது.

கடந்த பாதிப்புக்களின் போது சுமார் 90,000 வழக்குகளில் பதிவாகியிருந்ததுடன், 140 பேர் அதில் உயிரிழந்திருந்தமையும் சுட்டிகாட்டத்தக்கது.

2009 ஆம் ஆண்டு முதல் பொது சுகாதார மையம் அவசரநிலையை ஏழு முறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், H1N1,பன்றிக் காய்ச்சல், போலியோவைரஸ், எபோலா, ஜிகா வைரஸ், மீண்டும் எபோலா, கோவிட்-19 மற்றும் அம்மை நோயும் அதில் அடங்குவதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

related posts