ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரிற்கான சாதகநிலை அதிகரித்துள்ளதாக சுயாதீன கருத்துக்கணிப்பொன்று தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் குறித்து இன்ஸ்டியுட் ஒஃப் ஹெல்த் பொலிசி ஆய்வு நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பின் மூலமே இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
இதற்கமைய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கான சாதகமான நிலைமை 40 புள்ளிகள் அதிகரித்துள்ளது.
அதேவேளை, அநுரகுமார திஸாநாயக்கவிற்கான சாதக நிலை ஜூன் மாதத்தில் காணப்பட்டதை விட 29 புள்ளிகள் அதிகரித்துள்ளது.
மேலும், சஜித் பிரேமதாசவிற்கான சாதக நிலையில் சிறிய மாற்றமே ஏற்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது.