பிரபல இந்திய பின்னணி பாடகர் ஸ்ரீநிவாஸ் மீது கனடாவில் முட்டைவீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதுடன், பொலிஸ் பாதுகாப்புடன் அவர் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனடாவில் நடத்தப்படும் தமிழர் தெருவிழா நிகழ்ச்சி ஏற்பாட்டு அமைப்பான கனடிய தமிழ் காங்கிரஸூக்கும், பிறிதொரு அமைப்புக்குமிடையிலான முரண்பாடே இந்த குழுப்பத்தின் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி ஏற்பாட்டார்கள் இலங்கை அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளதாக தெரிவித்து புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.
மேலும், இநை நிகழ்ச்சி இடம்பெற்றபோது பாடகர் ஸ்ரீநிவாஸ் மீது முட்டையை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகின்றது. இது குறித்த காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
மேலும், கனடிய தமிழ் காங்கிரஸ் அமைப்பிற்கு எதிராக பாடை கட்டி இறுதிச் சடங்கும் செய்யப்பட்டிருந்தது.
இதேவேளை, இம்முறை தமிழர் தெருவிழாவை பல்வேறு தரப்பினர்களும் புறக்கணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள், பொதுமக்கள், வியாபார நிறுவனங்கள் என பல தரப்பினரும் குறித்த நிகழ்வை புறக்கணித்துள்ளதாக புலம்பெயர் தமிழர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், நிகழ்வு ஆரம்பிக்கும் முதலே குறித்த நிகழ்விற்கு எதிர்ப்புகள் கிளம்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இரண்டு நாட்களாக நடைபெற்ற நிகழ்வில் குறைந்தளவான மக்களே கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.