எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் போது குழப்ப நிலைமை ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இரண்டாவது விருப்பத்தேர்வை எண்ண வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இரண்டாவது விருப்பத்தேர்வை எண்ணி தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறாவிட்டால் பெரும் குழப்பங்கள் ஏற்படலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இலங்கையின் புவிசார் அரசியல் முக்கியத்துவம் காரணமாக, உலக ஒழுங்கை பேணுவதற்கு சமகால ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அதிகாரத்தில் வைத்திருக்க வெளிநாட்டு சக்திகள் செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.