ஆசியாவிலேயே அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட இந்திய நகரம் என்ற பெருமையை மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை பெற்றுள்ளது. இந்த நகரமானது சீனாவின் தலைநகரான பெல்ஜிங்கை பின்னுக்கு தள்ளியது.
ஹுருன் இந்தியா ரிச் லிஸ்ட் 2024 (Hurun India Rich Listers 2024) வெளியிட்ட அறிக்கையின்படி, ஆசியாவின் பில்லியனர் தலைநகரம் என்ற பெருமையை இந்திய வர்த்தக தலைநகரான மும்பை பெற்றுள்ளது.
இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ள சீனாவின் பெல்ஜிங்கை பின்னுக்கு தள்ளி மும்பை முதலிடத்தில் வந்துள்ளது.
அதன்படி, மும்பை நகரத்தில் 58 கோடீஸ்வரர்கள் அதிகரித்து அதன் மொத்த எண்ணிக்கை 386 ஆக உள்ளது. இதற்கு அடுத்தபடியான இடத்தில் டெல்லி உள்ளது.
அந்தவகையில் டெல்லியில் 18 கோடீஸ்வரர்கள் அதிகரித்து இந்த பணக்கார பட்டியல் எண்ணிக்கை 217 ஆக மாறியுள்ளது.
இதையடுத்து, ஐதராபாத்தில் குறிப்பிடத்தக்க வகையில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரித்து பெங்களூருவை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
அதன்படி, ஐதராபாத்தில் 17 கோடீஸ்வரர்கள் அதிகரித்து அதன் மொத்த எண்ணிக்கை 104 ஆக உள்ளது. பெங்களூரு 100 பணக்காரர்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
இதனிடையே, முதல் 10 இடங்களில் உள்ள மற்ற நகரங்களில் சென்னை (82), கொல்கத்தா (69), அகமதாபாத் (67), புனே (53), சூரத் (28), குருகிராம் (23) ஆகியவை உள்ளது.