விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பாகிஸ்தான் விமானி ஒருவர் விமானத்தின் கண்ணாடியை சுத்தம் செய்யும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாகிஸ்தானின் தேசிய விமான சேவையான செரீன் ஏர் விமானத்தின் பைலட் ஒருவரே ஏர்பஸ் 330-200 என்ற விமானத்தின் பக்கவாட்டு ஜன்னலுக்கு வெளியே சாய்ந்து, தெளிவான பார்வையை உறுதி செய்வதற்கான கண்ணாடியை இவ்வாறு துடைத்துள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து சவூதி அரேபியாவின் ஜித்தாவுக்குச் செல்லும் சர்வதேச விமானத்தில் நடந்த இந்த சம்பவம், விமானப் பாதுகாப்பு நெறிமுறைகளில் தரை ஊழியர்களின் பொறுப்புகள் பற்றிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.
இந்த வைரலான காணொளி சமூக வலைதள பயன்பாட்டாளர்களிடம் இருந்து பல்வேறு விமர்சனங்களைத் தூண்டியது.
இந்தக் காட்சியைக் கண்டு மகிழ்ந்த ஒரு பயனர், “இது போன்ற நிகழ்வுகள் பாகிஸ்தானில் மட்டுமே நடக்கும்” என்றார்.