2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களின் பொது விவாதம் நாளை (செப். 07) நடைபெறவுள்ளதாக சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கையின் (PAFFREL) நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டிகாரச்சி தெரிவித்துள்ளார்.
‘மார்ச் 12 இயக்கம்’ ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சி பிற்பகல் 3.00 மணி முதல் நேரடியாக ஒளிபரப்பப்படும் என தெரிவித்துள்ளார்.
மாலை 5.00 மணி வரை நாளை முக்கிய தொலைக்காட்சி அலைவரிசைகள் மூலமாகவும், 200 ற்கும் மேற்பட்ட சமூக ஊடக தளங்களிலும் ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அவர்களின் கொள்கைகளை பொதுமக்களுக்கு வழங்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது என ரோஹன ஹெட்டிகாரச்சி கூறியுள்ளார்.