Home உலகம் தனது பதவிக் காலத்தில் 40 வீதத்தை விடுமுறைக்காக எடுத்த – ஜோ பைடன்

தனது பதவிக் காலத்தில் 40 வீதத்தை விடுமுறைக்காக எடுத்த – ஜோ பைடன்

by Jey

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது 4 வருட பதவிக் காலத்தில் 532 விடுமுறை நாட்களை எடுத்துள்ளார் என்று நியூயோர்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.

இது ஒரு அமெரிக்க அலுவலக ஊழியர் 48 ஆண்டுகளில் எடுக்கும் சராசரி விடுமுறை நாட்களைப் போன்றது என்று குடியரசுக் கட்சியின் தேசியக் குழு ஆய்வு தெரிவிக்கிறது.

ஓர் அமெரிக்க அலுவலக ஊழியர் ஆண்டுக்கு சராசரியாக 11 விடுமுறை நாட்களைப் பெறுகிறார் என்று நியூயோர்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.

81 வயதான ஜனாதிபதி பைடன் தனது 1326 நாள் பதவிக்காலத்தில் 532 நாட்களை விடுமுறையில் கழித்துள்ளார்.

அதாவது அவர் தனது பதவிக் காலத்தில் 40 வீதத்தை விடுமுறைக்காக எடுத்துக் கொண்டுள்ளார் என்று நியூயோர்க் போஸ்ட் செய்தித்தாள் சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

related posts