இன்று (21) காலை 7 மணிக்கு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் ஆரம்பமாகியுள்ளது.
காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணி வரையில் வாக்களிப்பு நடவடிக்கைகளை மக்கள் முன்னெடுக்கலாம்.
மேலும் வாக்காளர்கள் அவர்களுக்குரிய ஆவணங்களை வாக்குச் சாவடிகளுக்கு கொண்டு சென்று கொடுக்கப்பட்டுள்ள உரிய நேரத்துக்குள் வாக்குகளை பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் 13,421 தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்களிப்புக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதுமட்டுமின்றி இம்முறை 1 கோடியே 71 இலட்சத்து 40ஆயிரத்து 352 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
தேர்தல் நடவடிக்கைகளை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை ஜனாதிபதி தேர்தலில் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றமையையும் காணக்கூடியதாக இருக்கிறது.