ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் இலங்கை அரசியல் பிரமுகர்கள் பலர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
அதன்படி முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே இந்தியன் ஏர்லைன்ஸின் ஏஐ-272 விமானத்தில் இந்தியாவின் சென்னைக்கு புறப்பட்டார்.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தாய் எயார் ஏசியா விமானம் FD-141 இல் தாய்லாந்தின் பாங்கொக்கிற்கு புறப்பட்டார்.
அதன் பிரகாரம் முன்னதாக தேர்தல் முடிவுகள் வெளிவர முன்னதாகவே சமந்த பத்ர தேரர் தென் கொரியாவை நோக்கிப் பயணப்பட்டிருந்தார்.