இன்றைய தினம் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அடுத்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க என்பது தெளிவாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாக்கு எண்ணும் நிலையங்களில் உள்ள தமது பிரதிநிதிகள் இது தொடர்பிலான தகவல்களை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.