இம்முறை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அரசியல் செல்வாக்கு மிக்க ராஜபக்ச குடும்பத்தினருக்கு பாரிய தோல்வி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜபக்ச குடும்பத்தினர் தெற்கில் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளனர்.
குறிப்பாக ராஜபக்ச குடும்பத்தினர் தங்களது கோட்டையாக கருதப்பட்ட ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பாரிய தோல்வியை எதிர்நோக்கி உள்ளனர்.
குறிப்பாக பெலியத்த, திஸ்ஸமஹாராம, முல்கிரிகல மற்றும் தங்காலை தொகுதிகளில் ராஜபக்சக்கள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட நாமல் ராஜபக்ச மாவட்டத்தில் 10 வீத வாக்குகளைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது.