Home இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் பதவி விலகல்

கிழக்கு மாகாண ஆளுநர் பதவி விலகல்

by Jey

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பதவி விலகியுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கமைய, அவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கீழ் புதிய அரசாங்கம் அமைக்கப்படவுள்ளது.

இந்நிலையில், அமைச்சர்கள், ஆளுநர்கள் என பலர் தங்களது பதவி விலகல்கள் குறித்து அறிவித்து வருகின்றனர்.

இதன்படி, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவி விலகல் தொடர்பில் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

related posts