முன்னாள் அமைச்சர் குமார வெல்கம காலமானார்.
இலங்கை அரசியலில் முக்கியமான ஓர் அரசியல்வாதிகளில் ஒருவராக வெல்கம திகழ்ந்தார்.
தனது 74ம் வயதில் அவர் காலமானார்.
கொழும்பில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் குமார் வெல்கம காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நோய் வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.