Home இலங்கை அனுபவம் இன்றி நாடாளுமன்றத்தை நிர்வகிக்க முடியாது – முன்னாள் ஜனாதிபதி ரணில்

அனுபவம் இன்றி நாடாளுமன்றத்தை நிர்வகிக்க முடியாது – முன்னாள் ஜனாதிபதி ரணில்

by Jey

அனுபவம் இன்றி நாடாளுமன்றத்தை நிர்வகிக்க முடியாது,நீங்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் தோல்வியடைவீர்கள் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் வெளியிட்ட விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும் முன்னோக்கி நகர்வதற்கும் தன்னுடன் இணைந்து செயற்பட்ட அனுபவசாலிகள் நாடாளுமன்றத்திற்கு செல்வது அவசியம். உங்களது எதிர்காலத்தை புதிய நாடாளுமன்றம் தீர்மானிக்கின்றது.

இதன் காரணமாக காஸ் சிலிண்டர் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், நான் ஜனாதிபதி தேர்தலில் காஸ்சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டேன் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஐக்கியதேசிய கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் புதிய கூட்டணி ஆகியன ஒன்றிணைந்து எனக்கு ஆதரவளித்தன.

இவர்கள் அனைவரும் எனது தலைமையின் கீழ் செயற்பட்டனர். இவர்கள் அனைவரும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஒன்றிணைகின்றனர்.புதிய ஜனநாயக கட்சியாக போட்டியிடுகின்றனர்.

எனது தலைமைத்துவத்தின் கீழ் அவர்கள் தேர்தலில் போட்டியிடவுள்ளனர். இவர்கள் அனைவரும் உரிய அனுபவம் உள்ளவர்கள்.

இவர்கள் கடந்த காலங்களில் தங்கள் பணியை ஒழுங்கான முறையில் முன்னெடுத்துள்ளனர். கடந்த இரண்டு வருடகாலமாக என்னுடன் இணைந்து செயற்பட்டவர்களிற்கு நாட்டின் பொருளாதார நெருக்கடியை கையாள்வதற்கான அனுபவம் உள்ளது.

ஆகவே அவர்கள் நாடாளுமன்றத்தில் இடம்பெறவேண்டும்.அனுபவம் இன்றி நாடாளுமன்றத்தை நிர்வகிக்க முடியாது,நீங்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் தோல்வியடைவீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

related posts