Home இந்தியா இந்தியாவில் 2045 ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய் பாதிப்புக்கள் அதிகரிக்கும்

இந்தியாவில் 2045 ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய் பாதிப்புக்கள் அதிகரிக்கும்

by Jey

இந்தியாவில் 2045 ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய் பாதிப்புக்கள் அதிகரிக்கும் என தேசிய மருத்துவ ஆராய்ச்சி கழகமான ஐசிஎம்ஆர் எச்சரித்துள்ளது.

இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் புற்றுநோய் பாதிப்பு தொடர்பில் ஆய்வு நடத்தப்பட்டது.

ஆய்வு முடிவுகளின்படி, 2022 முதல் 2045 ஆம் ஆண்டுக்கு இடையில் இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் மற்றும் அதனால் ஏற்படும் இறப்புகள் கடுமையாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டை விடவும் 2024ஆம் ஆண்டில் புற்றுநோய் பாதிப்பு 12.8 சதவீதம் அதிகரித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாய் மற்றும் மார்பக புற்றுநோய் பாதிப்புகளே அதிகம் எனவும் புகையிலை பொருட்களை அதிகம் உண்பதால் ஏனைய நாடுகளை விடவும் இந்தியாவில் வாய் புற்றுநோய் பாதிப்பு அதிகம் எனவும் தெரிய வந்துள்ளது.

 

 

related posts