Home இந்தியா ரஷ்ய உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வுகளை ஏற்படுத்தற்கு இந்தியா தயார்

ரஷ்ய உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வுகளை ஏற்படுத்தற்கு இந்தியா தயார்

by Jey

ரஷ்ய உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வுகளை ஏற்படுத்தற்கு இந்தியா எப்போதும் தயாராக உள்ளதாகவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுப்பட்ட போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

குறித்த சந்திப்பின் போது தற்போது நிலவி வரும் மோதல்களுக்கு அமைதியான தீர்வுகள் தேவை என தான் நம்புவதாக இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ரஷ்ய உக்ரைன் மோதலை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அனைத்து மோதல்களையும் பேச்சுவார்த்தைமூலம் தீர்க்க முடியும் என்பது தமது நிலைப்பாடு என இந்தியப் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மோதல்களுக்கு அமைதியான தீர்வுகள் இருக்க வேண்டும் என தாம் நம்புவதாகவும்,அமைதியை ஏற்படுத்த இந்தியா எப்போதும் தயாராக உள்ளதாகவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்

related posts