ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் பிரச்சினைகளுக்கு இன்று (04) தீர்வு வழங்கப்படாவிட்டால் நாளை (05) முதல் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரட்ன இதனை தெரிவித்துள்ளார்.
நடைமுறைகளை மீறி ரயில் நிலைய அதிபர்களை நியமித்தமைக்கு எதிராகவே குறித்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக கடந்த (30)ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், துறைசார் அமைச்சரின் தலையீட்டினால் இன்று பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்காவிட்டால் நாளை முதல் தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நிலைய அதிபர்கள் ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டாலும் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.