Home இந்தியா ட்ரம்ப்பை நண்பர் என வர்ணித்த மோடி

ட்ரம்ப்பை நண்பர் என வர்ணித்த மோடி

by Jey

2024 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டெனால்ட் டர்ம்பின் வெற்றி உறுதியாகியுள்ள நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோசடி குடியரசுக் கட்சியின் வேட்பாளருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

எக்ஸ் கணக்கில் வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ள நரேந்திர மோடி, ட்ரம்ப்பை நண்பர் என வர்ணித்துள்ளார்.

மோடியின் வாழ்த்துச் செய்தியானது அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி, அமெரிக்க-இந்தியா விரிவான உலகளாவிய மற்றும் மூலோபாய கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கான உற்சாகத்தை வெளிப்படுத்தியது.

அந்த செய்தியில்,

எனது நண்பர் டொனால்ட் ட்ரம்ப்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், உங்கள் வரலாற்றுத் தேர்தல் வெற்றியில் உங்கள் முந்தைய பதவிக் காலத்தின் வெற்றிகளை நீங்கள் கட்டியெழுப்பும்போது, ​​இந்தியா-அமெரிக்க விரிவான உலகளாவிய மற்றும் மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த எங்கள் ஒத்துழைப்பைப் புதுப்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.

ஒன்றாக, நமது மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை மேம்படுத்தவும் பாடுபடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

related posts

Leave a Comment