Home உலகம் அமெரிக்கா அரசாங்கத்தின் திறன் துறைக்கு – எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி

அமெரிக்கா அரசாங்கத்தின் திறன் துறைக்கு – எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி

by Jey

அமெரிக்கா அரசாங்கத்தின் திறன் துறைக்குத் தலைமை வகிப்பார்கள் என அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்கா ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற ட்ரம்ப் தனது அரசில் பணியாற்றுபவர்களைத் தேர்வு செய்து வருகிறார்.

தேர்தல் பிரசாரத்தின் போது டொனால்ட் ட்ரம்ப், தான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால், இலான் மஸ்கிற்கு அமைச்சர் பதவியையோ அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவியையோ வழங்குவதாகக் குறிப்பிட்டார்.

இந்தநிலையில் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் அமெரிக்க அரசின் திறன் துறைக்குத் தலைமை வகிப்பார்கள் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

குறித்த இருவரும் தனது அரசாங்கத்தில் இணைவதன் ஊடாக வீண் செலவுகளைக் குறைக்கவும், அமெரிக்காவைக் காப்பாற்றுவதற்கும் உதவும் எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

related posts

Leave a Comment