கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தென் அமெரிக்க நாடுகளுக்கான விஜயத்தை ஆரம்பித்துள்ளார்.
பிரேஸில் நடைபெறவுள்ள ஜீ20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இவ்வாறு விஜயம் செய்துள்ளார்.
முதலில் அவர் பேருவிற்கு விஜயம் செய்வார் என தெரிவிக்கப்படுகின்றது. பிரேஸிலின் ரியோ டி ஜெனய்ரோவில் ஜீ20 மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகில் நிலவி வரும் பட்டினி நிலைமை முதல் டிஜிட்டல் நாணயங்கள் வரையில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்த மாநாட்டில் கலந்துரையாடப்பட உள்ளது.
அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ட்ராம்ப் தெரிவு செய்யப்பட்டு இரண்டு வார இடைவெளியில் இந்த மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.