Home கனடா கனடாவில் வீடற்றோர் மரணங்கள் உயர்வு

கனடாவில் வீடற்றோர் மரணங்கள் உயர்வு

by Jey

கனடாவின் ரொறன்ரோ பகுதியில் வீடற்றவர்களின் மரணங்களில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் வீடற்றவர்களின் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது என தெரிவிக்கப்படுகிறது.

வாரம் ஒன்றிற்கு சுமார் ஐந்து மரணங்கள் பதிவாகி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ரெறான்ரோ பொதுசுகாதார அலுவலகம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் 135 வீடற்றவர்கள் உயிரிழந்திருந்தனர்.

2023 ஆம் ஆண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியின் மரண எண்ணிக்கைகளை விடவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய நாட்களில் வீடற்றவர்கள் மரணிப்பது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சட்டவிரோத போதை மருந்து பயன்பாட்டினாலும் மரணங்கள் பதிவாகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

related posts

Leave a Comment