Home உலகம் கென்டகி சூறாவளியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக உயர்வு?

கென்டகி சூறாவளியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக உயர்வு?

by Jey

அமெரிக்காவின் தென்மேற்கே கென்டகி பகுதியில் பல சூறாவளிகள் தொடர்ந்து தாக்கி வருகின்றன. இதில் 30 சூறாவளி புயல்கள் அந்நாட்டின் அர்கன்சாஸ், இல்லினாய்ஸ், கென்டகி, மிஸ்சிசிப்பி, மிசோரி மற்றும் டென்னஸ்சி ஆகிய 6 மாகாணங்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளன.

கென்டகியில் உள்ள மெழுகுவர்த்தி ஆலை ஒன்று புயலால் பெரிதும் பாதிப்படைந்து உள்ளது. அந்த ஆலையில் 110 பேர் இருந்துள்ளனர். இதனால், கென்டகியை சேர்ந்த 50 பேருக்கும் கூடுதலாக உயிரிழப்பு இருக்க கூடும் என கவர்னர் ஆண்டி பெஷீர் கூறியுள்ளார்.

இதனால், உயிரிழப்பு 70 முதல் 100 பேர் வரை இருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது என கவர்னர் ஆண்டி பெஷீர் கூறியுள்ளார். இந்த சக்தி வாய்ந்த சூறாவளி தாக்குதல்களை அடுத்து அவசரகால நிலையும் அறிவிக்கப்பட்டு உள்ளது. வீடுகளின் மேற்கூரை காற்றில் பறந்து போயுள்ளன.

இந்த சூறாவளியால், 3,31,549 பேர் மின் இணைப்பு இன்றி தவித்து வருகின்றனர். சூறாவளி எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டு உள்ளதுடன், 2.5 கோடி பேர் அச்சுறுத்தலான சூழலில் உள்ளனர்.

related posts