Home உலகம் சில நேரங்களில் துரதிர்ஷ்டவசமாக, இது நடந்தது என்பது உண்மை…

சில நேரங்களில் துரதிர்ஷ்டவசமாக, இது நடந்தது என்பது உண்மை…

by Jey

மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்ததை நினைவுகூர்ந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அந்த நிகழ்வு, “வரலாற்று சிறப்புமிக்க ரஷ்யாவின்” மறைவு என வர்ணித்துள்ளார்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு ஏற்பட்ட ரஷ்யாவின் பொருளாதார நெருக்கடி மிகவும் மோசமாக இருந்தது என்றும், தானும் அந்த நெருக்கடியை சந்தித்து ஒரு டாக்சி ஓட்டுநராக சில காலம் பணியாற்றியதாகவும், தற்போது ரஷ்யாவின் சக்திவாய்ந்த தலைவராக உள்ள புடின் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை அரசு தொலைக்காட்சியில் வெளிவந்த புடினின் (Vladimir Putin) கருத்துக்கள், வெளியுறவுக் கொள்கை நோக்கங்கள் குறித்த அவரது விமர்சகர்களின் ஊகங்களை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. விளாடிம்ர் புடின், பழைய சோவியத் ஒன்றியத்தை புனரமைக்க விருப்பம் கொண்டுள்ளார் என்றும், உக்ரைன் மீது தாக்குதல் நடத்த நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கிறார் என்றும் ஏற்கனவே பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ரஷ்யா (Russia) மிகப்பெரிய பணவீக்கத்தை சந்தித்தபோது, ​​சோவியத் ஒன்றிய சரிவைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதாரத்தின் கடினமான காலகட்டத்தில் தனிப்பட்ட முறையில் தான் வெகுவாக பாதிக்கப்பட்டதாகவும் புடின் கூறியுள்ளார்.

“சில நேரங்களில் (நான்) நிலவொளியில் டாக்ஸி ஓட்ட வேண்டியிருந்தது. இதைப் பற்றி பேசுவது நன்றாக இருக்காது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இது நடந்தது என்பது உண்மை” என்று அதிபர் புடின் கூறினார்.

சோவியத் கால கேஜிபியில் பணியாற்றிய புடின், மாஸ்கோவில் இருந்து ஆளப்பட்ட சோவியத் யூனியனின் சரிவை 20 ஆம் நூற்றாண்டின் “மிகப்பெரிய புவிசார் அரசியல் பேரழிவு” என்று முன்பு கூறியிருந்தார். ஆனால் அவரது புதிய கருத்துக்கள் அவர் அதை எந்த அளவு ஆழமாகப் பார்க்கிறார் என்பதை காட்டுகிறது.

ஜனவரியில் சாத்தியமான தாக்குதலுக்கான தயாரிப்பில் ரஷ்யா பல்லாயிரக்கணக்கான துருப்புக்களை உக்ரைனுக்கு அருகே குவித்ததாக மேற்கு நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன. மேலும் ஏழு பணக்கார ஜனநாயகக் குழுவானது மாஸ்கோவை ஞாயிற்றுக்கிழமை எச்சரித்தது. ரஷ்யா உக்ரைனை தாக்கினால், அதற்கான பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என அந்நாடு எச்சரிக்கப்பட்டுள்ளது.

related posts