கோவிட் தொற்று பரவுகை காரணமாக விக்டோரியா பல்கலைக்கழகத்தின் பரீட்சைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக மாணவர்கள் பரீட்சையில் பங்குபற்றுவது இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பிராந்திய சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய இவ்வாறு பரீட்சைகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் நூலகம் மற்றும் ஆய்வுகூடங்கள் என்பன திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியாவில் கோவிட் தொற்று உறுதியாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.