கோவிட்டின் சில திரிபுகளை கட்டுப்படுத்தக் கூடிய இரசாயனமொன்றை ஒன்றாரியோ ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
கோவிட் பெருந்தொற்றையும் சில திரிபுகளையும் கட்டுப்படுத்தக் கூடிய இரசாயனமொன்றே இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
றொரன்டூ பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னும் இரசாயனம் கோவிட் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய மாற்றங்களை சமனிலைப்படுத்தக் கூடியது எனவும் புதிய திரிபுகளை உருவாக விடாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இரசாயனம் உடல் கலன்களுக்குள் வைரஸ் தொற்று உட்புகுவதனை கட்டுப்படுத்தக் கூடியது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வகை இரசாயனத்தை குறைந்த செலவில் தயாரிக்க முடியும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.