Home உலகம் ஆர்டிக் கண்டத்தில் கடும் வெப்பநிலை

ஆர்டிக் கண்டத்தில் கடும் வெப்பநிலை

by Jey

ஆர்க்டிக் கண்டத்தில் முன்னெப்போதும் இல்லாதளவிற்கு கடும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

38 பாகை செல்சியல் (100F)வெப்பநிலை பதிவாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த உயர் வெப்பநிலை பதிவாகியதை உலக காலநிலை ஸ்தாபனம் இன்று உறுதிப்படுத்தியது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி சைபீரியாவின் Verkhoyansk நகரில் இந்த அதிகரித்த வெப்பநிலை பதிவாகியுள்ளது.

ஆர்க்டிக் கண்டத்தில் ஜூன் மாதத்தில் நாளொன்றில் பதிவாகும் சராசரி உயர் வெப்பநிலையைக் காட்டிலும் இது 18 பாகை செல்சியஸ் அதிகமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பானது உலகின் காலநிலை பாரியளவில் மாற்றமடைந்திருப்பதை உணர்த்தும் அபாய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

related posts