கியூபெக் மாகாணத்தில் கடைகள், தேவாலயங்கள், ரெஸ்டுரன்ட்கள் மற்றும் பார்கள் போன்ற பொது இடங்களில் கடைபிடிக்க வேண்டிய புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கடைகள், ரெஸ்டுரன்ட்கள் உள்ளிட்ட பொது இடங்களின் மொத்த கொள்ளளவில் 50 வீதமானோர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோவிட் பரவுகையை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி மட்டும் போதுமானதல்ல எனவும் மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டியது இன்றியமையாத்து எனவும் முதல்வர் பிரான்கோயிஸ் லெகாலெட் தெரிவித்துள்ளார்.
பார்கள், ரெஸ்டுரன்ட்கள், சில்லறைக் கடைகள், பொழுதுபோக்கு களியாட்ட விடுதிகள் என்பனவற்றின் மொத்த கொள்ளளவில் 50 வீதமானவர்களை அனுமதிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.