ஒமிக்ரோன் திரிபு காரணமாக இஸ்ரேலிய அரசாங்கம், கனடா மீது பயணத் தடை அறிவித்துள்ளது.
கனடா, அமெரிக்கா மற்றும் எட்டு நாடுகள் மீது இவ்வாறு பயணத்தடை அறிவித்துள்ளது.
இஸ்ரேலிய பிரதமர் Naftali Bennett இது குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
அமைச்சரவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் பிரகாரம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய பிரஜைகள் கனடா உள்ளிட்ட பத்து நாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்ளத் தடை வீக்கப்பட்டுள்ளதுடன், குறிப்பிட்ட நாடுகளிலிருந்து நாடு திரும்புவோருக்கு கடுமையான தனிமைப்படுத்தல் சட்டங்கள் அமுல்படுத்தப்பட உள்ளன.