இரு பாகங்கள் கொண்ட புஷ்பா படத்தின் முதல் பாகம், புஷ்பா தி ரைஸ் டிசம்பர் 17 வெளியானது. படம் கலவையான விமர்சனங்களை பெற்றது என்றாலும் படத்துக்கு கூட்டம் குறையவில்லை. ஐந்து மொழிகளிலும் படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. வெளிநாடுகளிலும் வசூலுக்கு குறைவில்லை.
அல்லு அர்ஜுனின் புஷ்பா படம் பாக்ஸ் ஆபிசில் தொடர்ந்து பிரம்மாண்ட வசூல் பெற்று வருகிறது. உலகம் முழுவதும் மூன்று நாட்களில் 173 கோடி ருபாய் பெற்று இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் தற்போது நான்காம் நாள் வசூலோடு சேர்ந்து மொத்த வசூல் 190 கோடியை தொட்டு இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. இன்று 200 கோடி என்ற மைல்கல்லை புஷ்பா கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கு மாநிலங்களில் புஷ்பா படத்தின் வசூல் அல்லு அர்ஜுன் படங்களில் அதிகபட்சமான வசூல் ஆகும். அதே போல் தமிழ்நாடு, கேரளாவிலும் புஷ்பா படமே அல்லு அர்ஜுன் படங்களில் அதிகம் வசூலித்திருக்கும் படம்.
வடஇந்தியாவில் புஷ்பாவின் இந்திப் பதிப்பு வெளியாகி முதல் 3 தினங்களில் 12 கோடிகளை வசூலித்துள்ளது. அல்லு அர்ஜுனின் படம் தெலுங்கில் வெளியாகும் அதேநாள் இந்தியில் வெளியானது இதுவே முதல்முறை. முதல் படத்திலேயே அசாதாரணமான வசூலை படம் பெற்றுள்ளது.
மேலும் ஹிந்தியில் புஷ்பா படத்தின் நான்காம் நாள் வசூல் முதல் இரண்டு நாட்களை விட அதிகரித்து இருக்கிறது. இது படத்திற்கு வரவேற்பு அதிகரித்து வருவதை காட்டுவதாக பாக்ஸ் ஆபிஸ் வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர்.
புஷ்பா இந்தி வசூல்:
முதல் நாள் – ரூ. 3.11 கோடி
இரண்டாம் நாள் – ரூ. 3.44 கோடி
மூன்றாம் நாள் – ரூ. 5.18 கோடி
நான்காம் நாள் – ரூ. 4.25 கோடி
ஆந்திராவில் முதல்வார இறுதி நாட்களில் புஷ்பா 65 கோடி வசூலித்து உள்ளது.
முதல் பாகம் வெற்றி பெற்றால் இரண்டாவது பாகத்துக்கான எதிர்பார்ப்பு கூடும். அதே போல் வசூலும், பாகுபலியிலும் அதேதான் நடந்தது. புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்தை அடுத்த வருடம் வெளியிடுகின்றனர். அப்போது முதல் பாகத்தைத் தாண்டி அது வசூலிக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.