ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட்டின் வீட்ன் எதிரில் போராட்டம் நடத்திய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கோவிட் தடுப்பூசிக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே முதல்வரின் வீட்டை மறித்து எதிர்ப்பு போராட்டம் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், முதல்வரின் வீட்டின் எதிரில் போராட்டம் நடத்திய நபர்களில் குறித்த பெண், பாதுகாப்பு தடுப்புக் காவலை மீறி உள்ள பிரவேசிக்க முயற்சித்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு விதிகளை மீறிச் செயற்பட முயற்சித்த காரணத்தினால் குறித்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த பெண்ணை சிறிது நேரம் தடுத்து வைத்திருந்த பொலிஸார் பின்னர் விடுதலை செய்துள்ளனர்