Home கனடா வயது வந்த அனைவரும் பூஸ்டர் மாத்திரை பெற்றுக்கொள்ள முடியும்

வயது வந்த அனைவரும் பூஸ்டர் மாத்திரை பெற்றுக்கொள்ள முடியும்

by Jey

அல்பர்ட்டா மாகாணத்தில் வயது வந்த அனைவரும் பூஸ்டர் கோவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண முதல்வர் ஜேசன் கென்னியினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கோவிட் பரவுகை காரணமாக மாகாணத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக நிலையங்கள், சந்தைகள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் கூடும் இடங்களில் வாடிக்கையாளர் எண்ணிக்கையை வரையறுக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

ரெஸ்டுரன்ட் மற்றும் பார்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்திருந்து உணவு உட்கொள்ளவோ அல்லது பானங்களை அருந்தவோ இடமளிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண அரசாங்கத்தின் புதிய கோவிட் கட்டுப்பாடுகள் என்.எச்.எல் விளையாட்டுப் போட்டிகளையும், உலக இளையோர் ஹொக்கிப் போட்டிகளையும் வெகுவாக பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒமிக்ரோன் பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

related posts