கனடாவில் ஒரே நாளில் இருபதாயிரம் கோவிட் தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளனர்.
நேற்றைய தினம் மட்டும் கனடாவின் மொத்த கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை 20699 என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவில் நாளாந்தம் பத்தாயிரம் கோவிட் தொற்று உறுதியாளர்கள் என்ற எண்ணிக்கை எட்டுவதற்கு நோய்த் தொற்று ஆரம்பமாகி 684 நாட்கள் கடந்தது.
எனினும், பத்தாயிரம் என்ற நாளாந்த மொத்த எண்ணிக்கையிலிருந்து இருபதாயிரம் என்ற எண்ணிக்கையை எட்டுவதற்கு வெறும் நான்கு நாட்கள் மட்டுமே கடந்துள்ளது.
விடுமுறைக் காலத்தில் ஒமிக்ரோன் தொற்றின் பரவுகை வெகுவாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.