கனடாவில் அரசாங்கத்தின் பணம் பிழையான கணக்குகளில் வைப்புச் செய்யப்பட்ட பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த நிதி ஆண்டில் இவ்வாறு பல மில்லியன் டொலர்கள் பிழையான கணக்குகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2020-2021ம் ஆண்டுகளில் மட்டும் 26 மில்லியன் டொலர் பணம் தவறான கணக்குகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் திகதி தொடக்கம் 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதி வரையில் 22170 பிழையான கணக்குகளில் 25.9 மில்லியன் டொலர் பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.
இதில் 7.2 மில்லியன் டொலர் பணம் மட்டுமே மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2009ம் ஆண்டின் பின்னர் பிழையான கணக்குகளில் கூடுதல் தொகை வைப்புச் செய்யப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பமாக இந்த சந்தர்ப்பம் கருதப்படுகின்றது.