Home கனடா உலகின் வலுவான நீதியின் குரலொன்று மௌனித்து போனது – ட்ரூடோ

உலகின் வலுவான நீதியின் குரலொன்று மௌனித்து போனது – ட்ரூடோ

by Jey

உலகின் வலுவான நீதியின் குரலொன்று மௌனித்து போனது என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

தென் ஆபிரிக்க பேராயர் டெஸ்மன்ட் டுடுவின் மறைவு தொடர்பில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நேபாள் சமாதான விருது வென்ற பேராயர் டுடுவின் மரண செய்தி அதிர்ச்சியையும் கவலையையும் அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

90 வயதான டுடு நேற்றைய தினம் தென் ஆபிரிக்காவில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன ஒடுக்குமுறைக்கு எதிராகவும், மாற்றுப் பாலினத்தவர்களின் உரிமைகளுக்காகவும் பேராயர் டுடு அயராது குரல் கொடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கனேடிய மக்களின் சார்பில் பேராயரின் குடும்பத்தினருக்கும் தென்னாபிரிக்க மக்களுக்காகவும் ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுக் கொள்வதாக பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

related posts