Home உலகம் 24 ஆன்மீகவாதிகள் நியமனம்

24 ஆன்மீகவாதிகள் நியமனம்

by Jey

ஏலியன்களின் மர்மத்தை உடைக்க நாசா முழுமையான முயற்சியில் இறங்கியுள்ளது. நாசா உண்மையில் வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பில் உள்ளது. இது உங்களுக்கு அறிவியல் புனைகதை, அல்லது திரைப்படம் போல் தோன்றினாலும், அது தான் உண்மை. தற்போது, ஆன்மீக வாதிகளை நாசா நியமித்து வருகிறது.

 

வேற்றுகிரகவாசிகளைப் ஆன்மீகவாதிகள் என்ன நினைக்கின்றர் என்பதை அறிய, உலகின் பல்வேறு இடங்களில் இருந்து 24 ஆன்மீகவாதிகளை நியமித்துள்ளது.

 

நாசாவின் ஆன்மீகவாதிகளின் ஆட்சேர்ப்பில் பிரிட்டிஷ் பாதிரியார் ரெவரெண்ட் டாக்டர் ஆண்ட்ரூ டேவிசனின் (Rev Dr. Andrew Davison) பெயரும் இடம்பெற்றுள்ளது. ரெவரெண்ட் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஒரு இறையியலாளர். உயிர் வேதியியலில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

இறையியலாளர்கள் யார்?

பிரிட்டிஷ் காலின்ஸ் அகராதியில், ‘இறைவியலாளர் என்பது கடவுளின் இயல்பு, மதம் மற்றும் மத நம்பிக்கைகள் குறித்து நன்கு படித்து அறிந்தவர்கள்.’

பூமிக்கு வெளியே உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் மேலும் மேலும் அதிகரித்து வருவதாக டாக்டர். டேவிசன் நம்புகிறார். டேவிசனின் புத்தகமான, ஆஸ்ட்ரோபயாலஜி மற்றும் கிறிஸ்டியன் டோக்ட்ரின் என்னும் புத்தகத்தில், அவர்: கடவுள் பிரபஞ்சத்தில் வேறு இடங்களிலும் உயிர்களை படைத்திருக்க முடியுமா? என்பது குறித்து கேள்விகள் கேட்கிறார்.

அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகலாம்
விண்வெளியில் பூமியில் உயிரினங்கள் இருப்பதை பற்றி குறிப்பிட்ட அவர், இந்த விண்மீன் மண்டலத்தில் 100 பில்லியனுக்கும் அதிகமான நட்சத்திரங்களும், பிரபஞ்சத்தில் 100 பில்லியனுக்கும் அதிகமான விண்மீன் திரள்களும் இருக்கும்போது, பூமியில் மட்டும் உயிர்கள் வாழ்கின்றன என்பது சரியல்ல என்று கூறினார். அதாவது பூமியைத் தவிர இந்தப் பிரபஞ்சத்தில் வேறு இடங்களிலும் உயிர்கள் இருக்கலாம் என் அவர் கூறுகிறார்.

எதிர்காலத்திற்கு இப்போதே தயார் செய்வது அவசியம் என கூறும் அந்த பேராசிரியர், வேற்றுகிரகவாசிகளை கண்டுபிடிக்கப்படும் முன், நாம் . நம்மை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்று அவர் நம்புகிறார். அதாவது, எதிர்காலத்தை மனதில் வைத்துக் கொண்டு, இந்த விஷயத்தை எதிர் கொள்ள முன்கூட்டியே தயாராக வேண்டும் என அவர் கூறுகிறார்

related posts