உடுப்பி கிருஷ்ண மடத்தில் சில நாட்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பா.ஜனதா தேசிய இளைஞர் அணி தலைவர் தேஜஸ்வி சூர்யா எம்.பி. கலந்து கொண்டு பேசுகையில்,‘‘முஸ்லிம், கிறிஸ்தவர்களாக மாறிய இந்துக்களை மீண்டும் இந்து மதத்திற்கே மாற்ற மடங்கள் முயற்சி செய்ய வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தார்.
இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து தேஜஸ்வி சூர்யா, அந்த கருத்தை வாபஸ் பெற்றார். இந்த நிலையில் இதுகுறித்து நடிகை ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தேஜஸ்வி சூர்யாவின் புகைப்படத்தை பதிவிட்டு, அவரது தலையில் இருந்து மூளை எடுக்கப்பட்டுவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது அவருக்கு மூளை இல்லை என்பதை அவர் கூறியுள்ளார்.