கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை தொடர்பிலான தகவல்கள் துல்லியமானவை அல்ல என தெரிவிக்கப்படுகின்றது.
விடுமுறைக் காலம் என்பதனால் மெய்யான தொற்று உறுதியாளர்கள் எண்ணிக்கை விபரங்கள் தற்பொழுது பதிவாகவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பதிவாகி வரும் எண்ணிக்கை விடவும் கூடுதல் எண்ணிக்கையில் தொற்று உறுதியளார்கள் பதிவாகியிருக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, தொற்று உறுதியான சுகாதார பணியாளர்கள் தொடர்ந்தும் கடமையில் ஈடுபடுவதற்கு பல மாகாணங்கள் அனுமதி வழங்கியுள்ளன.
சுகாதார சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.