Home உலகம் இஸ்ரேலில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

இஸ்ரேலில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

by Jey

2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 2022-ம் ஆண்டு தொடங்க உள்ள நிலையிலும் இன்னும் முடிவுக்குவரவில்லை.

கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றங்களை அடைந்து டெல்டா, ஆல்பா, டெல்டா பிளஸ் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் பரவி வருகிறது. தற்போது ஒமைக்ரான் என்ற உருமாற்றம் அடைந்து உலகம் முழுவதும் பரவி வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேலில் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ப்ளோரனா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வைரஸ் இஸ்ரேலில் ஒருநபருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் மற்றும் ப்ளூவென்சா தொற்று ஆகிய 2 தொற்றுகள் சேர்ந்து ’ப்ளோரனா’ என பெயரில் புதிய தொற்று உறுதியாகியுள்ளது.

பிரசவத்திற்காக வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு இந்த ப்ளோரனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுடன் இன்ப்ளுவன்சா என்ற வைரசும் இணைந்து இந்த ப்ளரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்த இன்ப்ளுவன்சா தொற்றுக்கு காய்ச்சல், சளி, தசைவலி, இருமல், நெரிசல், மூக்கு ஒழுகுதல், தலைவலி மற்றும் சோர்வு ஆகியவை அறிகுறிகளாகும். இது கொரோனா வைரசுடன் சேர்ந்து கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரியவந்துள்ளது. இந்த வைரஸ் தொற்றால் நிமோனியா ஏற்படலாம். மேலும், சில நேரங்களில் மரணமும் ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த புதிய ப்ளரோனா வைரஸ் தொற்று குறித்து விஞ்ஞானிகள் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

related posts